விஷகிழங்கை அரைத்து குடித்த மூதாட்டி சாவு
வேதாரண்யம் அருகே விஷகிழங்கை அரைத்து குடித்த மூதாட்டி சாவு
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் பண்டாரத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆச்சியம்மாள் (வயது70). இவர் தூக்கம் இன்றி தவித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அருகேயுள்ள கார்த்திகை கிழங்கு என்ற விஷ கிழங்கை அரைத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆச்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story