வடமதுரை அருகே குட்டையில் மூழ்கி மூதாட்டி பலி


வடமதுரை அருகே குட்டையில் மூழ்கி மூதாட்டி பலி
x

வடமதுரை அருகே குட்டையில் மூழ்கி மூதாட்டி பலியானார்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள முத்தனாங்கோட்டையை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 70). இவர் அதே பகுதியில் உள்ள தனது மகன் முருகனின் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 22-ந்தேதி வீட்டில் இருந்த பாப்பாத்தி திடீரென்று மாயமானார். அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாப்பாத்தியை தேடிவந்தனர். இதற்கிடையே நேற்று இரவு முத்தனாங்கோட்டை அருகே காட்டுப்பகுதியில் உள்ள மழைநீர் குட்டையில் பாப்பாத்தி பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றினர்.

பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில், குட்டையில் பாப்பாத்தி தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.


Next Story