கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு
ராமநாதபுரம்
காரைக்குடி,
காரைக்குடி பாண்டியன் நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் ராஜா. இவர் கல்லலில் தங்கி தோட்ட வேலைகளை பார்த்து வருகிறார். பாண்டியன் நகரில் அவரது தாயார் சொர்ணம் (வயது75) மற்றும் அவரது குடும்பத்தார் இருந்து வருகின்றனர். சம்பவத்தின்போது கிணற்று அருகே சென்ற சொர்ணம் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி உள்ளே விழுந்து விட்டார்.
இதனைக்கண்ட அவரது குடும்பத்தினர் காரைக்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு காரைக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி இறந்த நிலையில் மூதாட்டியை மீட்டனர்.
இது குறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story