கிணற்றில் விழுந்த மூதாட்டி சாவு
தூத்துக்குடியில் கிணற்றில் விழுந்த மூதாட்டி இறந்து போனார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் அய்யர்விளையை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி பார்வதி (வயது 73). இவர் கடந்த 27-ந் தேதி வீட்டின் அருகே இருந்த கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டாராம். உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மூதாட்டி பார்வதியை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story