ஓடும் பஸ்சில் மூதாட்டிக்கு திடீர் நெஞ்சுவலி; சரியான நேரத்தில் ஆஸ்பத்திரியில் சேர்த்த டிரைவருக்கு பாராட்டு


ஓடும் பஸ்சில் மூதாட்டிக்கு திடீர் நெஞ்சுவலி;  சரியான நேரத்தில் ஆஸ்பத்திரியில் சேர்த்த டிரைவருக்கு பாராட்டு
x

ஓடும் பஸ்சில் மூதாட்டிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. சரியான நேரத்தில் ஆஸ்பத்திரியில் சேர்த்த டிரைவருக்கு பாராட்டு தொிவிக்கப்பட்டது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூரில் இருந்து ஈரோட்டுக்கு நேற்று மதியம் அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை ராஜா என்கிற சண்முகசுந்தரம் (வயது 40) ஓட்டினார். கண்டக்டராக ராஜ்குமார் (38) இருந்தார். பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர். அந்தியூரை அடுத்த செம்புளிச்சாம்பாளையம் அருகே சென்றபோது 60 வயது மூதாட்டி ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே இதுகுறித்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனது. இதற்கிடையே மூதாட்டி நெஞ்சுவலியால் அலறி துடித்தார். உடனே டிரைவர் பஸ்சில் இருந்த அத்தனை பயணிகளையும் கீழே இறக்கி விட்டார். உடனே பஸ்சை மீண்டும் அந்தியூருக்கு ஓட்டி சென்றார். பின்னர் அந்த மூதாட்டியை அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அந்த மூதாட்டிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் அந்த மூதாட்டி உடல் நலம் தேறினார். சரியான நேரத்தில் மூதாட்டியை ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் மூதாட்டி உயிா் பிழைத்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.. சரியான நேரத்தில் முடிவு எடுத்து மீண்டும் பஸ்சை அந்தியூருக்கு திருப்பி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்த டிரைவர் ராஜாவுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story