100-வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி


100-வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

5 தலைமுறைகளை பார்த்தவர், 100-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே ஓரசோலை அன்னோடை கிராமத்தை சேர்ந்த அச்சா கவுடர் என்பவரது மனைவி சீதையம்மாள் (வயது 100). இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். சீதையம்மாள் மகன்கள், மகள்கள் வழியாக மொத்தம் 11 பேரன், பேத்திகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி மொத்தம் 16 கொள்ளு பேரப்பிள்ளைகள் உள்ளனர். கொள்ளுப் பேர பிள்ளைகளுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் 5 தலைமுறைகளை கண்ட சீதையம்மாள், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் அவரது உறவினர்கள், பேரன், பேத்திகள், கொள்ளு பேரப்பிள்ளைகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு மூதாட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் தங்களது பாடல்களை பாடி, பாரம்பரிய நடனமாடி மூதாட்டியை மகிழ்வித்தனர். பின்னர் அவர்கள் மூதாட்டியிடம் ஆசி பெற்று சென்றனர். மேலும் 100-வது வயதில் அடியெடுத்து வைத்த மூதாட்டியை நேரில் சந்தித்து, கிராம மக்கள் ஆர்வமுடன் ஆசி பெற்று செல்கின்றனர்.


Next Story