நடைபாதையில் படுத்து தூங்கிய மூதாட்டி கார் சக்கரத்தில் சிக்கி பலி
நடைபாதையில் படுத்து தூங்கிய மூதாட்டி, கார் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
கார் சக்கரத்தில் சிக்கி பலி
சென்னை ராயபுரம் செட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர் மாதவி (வயது 60). நடைபாதையோரம் வசித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு என்.டி.ஆர். மேம்பாலத்தில் உள்ள சர்வீஸ் சாலையில் படுத்து தூங்கிகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார், நடைபாதையில் தூங்கி கொண்டிருந்த மாதவி மீது ஏறி இறங்கியது. கார் சக்கரத்தில் சிக்கிய மாதவி, தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ராயபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு ெசய்து காரை ஓட்டி வந்த குட்டு புத்தின் (22) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (34). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று பணிக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
குன்றத்தூர் தனியார் கல்லூரி அருகே சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.