விழுப்புரத்தில் கட்டப்பட்டுவரும்அதிநவீன மீன் அங்காடி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்அமைச்சர் பொன்முடி தகவல்


விழுப்புரத்தில் கட்டப்பட்டுவரும்அதிநவீன மீன் அங்காடி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்அமைச்சர் பொன்முடி தகவல்
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் கட்டப்பட்டுவரும் அதி நவீன மீன் அங்காடி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

விழுப்புரம்


விழுப்புரத்தில் புதுச்சேரி சாலையில் உள்ள அனிச்சம் பாளையம் அருகே ரூ.3 கோடி மதிப்பில் புதிதாக நவீன மீன் அங்காடி கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முழுமையடையும் தருவாயில் இருக்கிறது.

மேலும் இந்த கட்டிடத்தில் தரை தளம் அமைக்க ரூ.58 லட்சம் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில், இங்கு நடந்து வரும் பணிகளை அமைச்சர் பொன்முடி நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க நகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

விரைவில் பயன்பாட்டுக்கு வரும்

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், விழுப்புரம் நகரத்தில் அமைக்கப்பட்டு வரும் அதி நவீன மீன் அங்காடி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இங்கு சிறு வியபாரிகள் முதல் மொத்த வியாபாரிகள் வரை அனைவரும் மீன் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவர். விழுப்புரம் நகரில் மீன் வியாபாரிகள் இடப்பிரச்சினை பல நாட்களாக நிலவி வரும் இந்த பிரச்சினை விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது கலெக்டர் பழனி, எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி, விழுப்புரம் மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயசந்திரன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா மற்றும் மீன் வியபாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story