தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்


தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x

நெல்லை மாவட்த்தில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அப்புவிளை பஞ்சாயத்து காமராஜர் திடலில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்தது. நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். ராதாபுரம் யூனியன் துணைத்தலைவர் இளையபெருமாள், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் சாந்தா மகேஷ்வரன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சமூகைமுரளி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விக்கிரமசிங்கபுரத்தில் நகர தி.மு.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் அதியமான் தலைமை தாங்கினார். பொருளாளர் ரவி, துணைச் செயலாளர்கள் இசக்கி, அய்யப்பன், மாவட்ட பிரதிநிதி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் கணேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு பேசினார்.

இதில் பேச்சாளர் முத்தையா, மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், நகராட்சி துணைத் தலைவர் திலகா, பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story