கார் மீது வேரோடு சாய்ந்து விழுந்த மரம்
சென்னாவரம் கிராமத்தில் மரம் வேரோடு சாய்ந்து கார் மீது விழுந்தது. இதனால் கார் அப்பளம் போல் நொறுங்கியது. ஆங்காங்கே மரம் விழுந்ததால் வந்தவாசி பகுதியில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
வந்தவாசி
சென்னாவரம் கிராமத்தில் மரம் வேரோடு சாய்ந்து கார் மீது விழுந்தது. இதனால் கார் அப்பளம் போல் நொறுங்கியது. ஆங்காங்கே மரம் விழுந்ததால் வந்தவாசி பகுதியில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கார் மீது விழுந்த மரம்
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதனால் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலை சென்னாவரம் கிராமம் அருகே மேல்மருவத்தூர் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது.
சாகுல் என்பவரின் கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மீது மரம் விழுந்ததால் அப்பளம் போல் நொறுங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மின்சாரம் துண்டிப்பு
இதேபோல் சென்னாவரம் கிராமத்தில் மரம் விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்தது. மேலும் தொடர்ந்து வந்தவாசி பகுதியில் அதிகளவில் காற்று வீசி வருவதால் நேற்று இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மேலும் வந்தவாசி அடுத்த மும்முனி, ஆயிலவாடி, பிருதூர், கல்லாகுத்து உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மரங்கள் வேரோடு சாலையில் சாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தங்கியிருந்த மக்களை சளுக்கை கிராமத்தில் 20 நபர்களும், பிருதூர் கிராமத்தில் 19 நபர்களும், வழூர் கிராமத்தில் 25 நபர்களும் ஊராட்சி கட்டிடம், மற்றும் சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வந்தவாசி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை காற்றின் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.