மங்கலம் நல்லம்மன் தடுப்பணை கோவில் தரைப்பாலம் சேதம்
நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை கோவில் முன்பு இருந்த தரைப்பாலம் சேதமடைந்து அடித்துசெல்லப்பட்டது.இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நல்லம்மன் தடுப்பணை
திருப்பூர் மாவட்டம், மங்கலம் பகுதியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே நல்லம்மன் தடுப்பணை உள்ளது. இந்த நல்லம்மன் தடுப்பணையின் மையப்பகுதியில் நல்லம்மன் கோவில் உள்ளது.
இந்த நல்லம்மன் கோவிலில் மங்கலம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் அமாவாசை மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமை தினங்களில் பக்தர்கள் இக்கோவிலில் வழிபட்டுச் செல்வது வழக்கம்.
பாலம் சேதமடைந்தது
அதன்படி தற்போது கடந்த சில தினங்களில் தொடர்ச்சியாக பெய்த மழையால் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் நொய்யலின் கரைப்பகுதியில் இருந்து நல்லம்மன் கோவிலுக்கு செல்லும் தரைப்பாலமானது நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்து அடித்துச்செல்லப்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதேபோல் திருப்பூர் அணைமேடு தடுப்பணைபகுதியில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது.இதனை அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்து செல்போன்களில் படம் பிடித்து சென்றனர்.