ஆனந்த விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
விளாத்திகுளம் ஆனந்த விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் ஆற்றுப்பாலம் அருகேயுள்ள ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று கோவில் வளாகத்தில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 201 பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்பு பூஜைகள் செய்து விநாயகரை வழிபட்டனர். இதை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூ, அருகம்புல் உள்ளிட்டவற்றை கொண்டு மாலை சாற்றி அலங்கரிக்கப்பட்ட பின் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்து சென்றனர்.
Related Tags :
Next Story