ஆனந்தன் நியமனம்


ஆனந்தன் நியமனம்
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா வெளிநாடு-அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு துணை தலைவராக ஆனந்தன் நியமனம்

தென்காசி

வாசுதேவநல்லூர்:

தமிழக பா.ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத் தலைவராக அ.ஆனந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா விஸ்வநாத பேரியை சேர்ந்த வாசுதேவநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அ.மனோகரனின் சகோதரரும், அமெரிக்கா ஒரேகான் மாகாண தமிழ்ச்சங்க இயக்குனரும், பிரைம் ரியாலிட்டி குரூப் நிறுவனங்களின் உரிமையாளரும் ஆவார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தென்காசி கட்சி அலுவலகம் வந்திருந்த பாரதிய ஜனதா கட்சி தமிழக மேலிட பார்வையாளர் சுதாகர் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாநில செயலாளர் எஸ்.கே.சூர்யா, தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

அதன் பின்பு மாலையில் தனது சொந்த ஊரான விஸ்வநாதப்பேரிக்கு வருகை தந்தார். அவருக்கு வாசுதேவநல்லூர் வடக்கு, மற்றும் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய தலைவர் சோழராஜன், தெற்கு ஒன்றிய தலைவரும் சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான வக்கீல் ராம்குமார், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய தலைவர் சண்முகராஜ், மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் சங்கரநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story