மீனவர்களை தொடந்து அச்சுறுத்தும் இலங்கை கடற்படையினரின் அராஜக போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


மீனவர்களை தொடந்து அச்சுறுத்தும் இலங்கை கடற்படையினரின் அராஜக போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
x

மீனவர்களை தொடந்து அச்சுறுத்தும் இலங்கை கடற்படையினரின் அராஜக போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த 8 மீனவர்கள் கோடியக்கரையில் மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. அதோடு அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்துள்ளது . ஒருசில நாட்களுக்கு முன்னர் தான் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் கைது செய்து செய்து இலங்கை இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது . மத்திய மாநில அரசுகள் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வகையிலே இவற்றிற்கு உரிய வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .

தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு தொடந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இலங்கை கடற்படையினரின் அராஜக போக்கு மிகவும் கண்டிக்கதக்கது . மத்திய மாநில அரசுகள் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளித்து , இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமல் தடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story