அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்
அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலை
வந்தவாசி
வந்தவாசி நகர தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் வந்தவாசி கோட்டை மூலையில் நடைபெற்றது
நகர செயலாளர் எ.தயாளன் தலைமை தாங்கினார். வந்தவாசி நகரமன்ற தலைவர் எச்.ஜலால், துணைத்தலைவர் க.சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக அரசு கொறடா கோ.வி.செழியன், எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.சீதாபதி, தலைமை கழக பேச்சாளர் பொன்னேரி சிவா ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஒன்றிய செயலாளர்கள் ப.இளங்கோவன், எஸ்.பிரபு, சி.ஆர்.பெருமாள், கே.பி.பழனி ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கே.யுவராஜா நன்றி தெரிவித்தார்.
Related Tags :
Next Story