மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

புதுக்கோட்டை


புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியை சேர்ந்த தொழில் அதிபரான நிஜாம் முகைதீன் என்பவரை கடந்த ஏப்ரல் 24-ந் தேதி கொலை செய்து 170 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜோஸ் மில்டன் (23) என்பவரை போலீசார் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, ேஜாஸ்மில்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு ஜோஸ் மில்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ேஜாஸ் மில்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story