பெண் டாக்டரை 3-வதாக திருமணம் செய்து ஏமாற்றிய ஆந்திர வாலிபர்


பெண் டாக்டரை 3-வதாக திருமணம் செய்து ஏமாற்றிய ஆந்திர வாலிபர்
x

வேலூர் அரசு மருத்துவமனை பெண் டாக்டரை 3-வதாக திருமணம் செய்து ஆந்திர மாநில வாலிபர் ஏமாற்றினார்.

வேலூர்

வேலூர் அரசு மருத்துவமனை பெண் டாக்டரை 3-வதாக திருமணம் செய்து ஆந்திர மாநில வாலிபர் ஏமாற்றினார்.

வேலூர் டாக்டர்

வேலூர் அடுக்கம்பாறை பாரதிதாசன் நகரை சேர்ந்த 36 வயது பெண் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இவர் 2-வதாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியை சேர்ந்த தரகரிடம் இதுகுறித்து தெரிவித்தார். அப்போது அந்த தரகர் திருப்பதி அருகே உள்ள உதயமாணிக்கம் கிராமம் மாட்டிலவாடி பகுதியை சேர்ந்த மதுசூதனரெட்டி என்பவர் திருமணத்திற்கு பெண் தேடுவதாக தெரிவித்துள்ளார்.

அவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்து பேசி முடித்தனர்.

கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். அருகே உள்ள ஒரு கோவிலில் பெண் டாக்டருக்கும், மதுசூதன ரெட்டிக்கும் திருமணம் நடந்தது.

3-வதாக திருமணம்

அவர்கள் வேலூரில் குடும்பம் நடத்தினர். அந்த டாக்டர் கர்ப்பமானார். இதனிடையே மதுசூதனரெட்டியின் நடவடிக்கையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து விசாரித்த போது மதுசூதனரெட்டி ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்ததும், இதனை மறைத்து 3-வதாக தன்னை திருமணம் செய்து கொண்டதும் அவருக்கு தெரியவந்தது.

இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் மதுசூதனரெட்டியிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மேலும் மதுசூதன ரெட்டியை அறிமுகப்படுத்திய தரகர் அவரது உறவினர் என்பதும் தெரியவந்தது.

இதுபற்றி மீண்டும் டாக்டர் அவரிடம் கேட்டபோது, மதுசூதனரெட்டி மற்றும் அவரின் குடும்பத்தினர், தரகர் ஆகியோர் சேர்ந்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் திருமண சீர்வரிசை பொருட்கள் அனைத்தையும் அவர்கள் டாக்டரின் வீட்டில் இருந்து எடுத்துச் சென்றுவிட்டனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த டாக்டர் இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

தன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story