ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் ஆண்டிமடம் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் தேன்மொழி வைத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, நாராயணன் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற தீர்மான நகலை கணக்கர் பாக்யராஜ் வாசித்தார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வரவு, செலவு கணக்கு குறித்தும், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் விவாதங்கள் நடத்தி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். இதையடுத்து, அந்தந்த ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து பொது மக்களை பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் மாதம் ஒருமுறை சுத்தம் செய்து ப்ளீச்சிங் பவுடர் போட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) அழகானந்தம் நன்றி கூறினார்.