ஆண்டிப்பட்டியில் காய்கறி கடைகளுக்கு தீ வைப்பு


ஆண்டிப்பட்டியில்  காய்கறி கடைகளுக்கு தீ வைப்பு
x

ஆண்டிப்பட்டியில் காய்கறி கடைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர

தேனி

ஆண்டிப்பட்டி நகரில் மீனாட்சியம்மன் கோவில் அருகில் காய்கறி வாரச்சந்தை இயங்குகிறது. இந்த சந்தைக்கு செல்லும் பஜார் வீதியில் காய்கறி கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த காய்கறி கடைகளில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்ம நபர்கள் கடைகளுக்கு தீ வைத்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் ஆகியோர் வந்து பார்வையிட்டனர்


Next Story