ஆண்டிப்பட்டியில் மஞ்சப்பை திட்ட தொடக்க விழா


ஆண்டிப்பட்டியில்  மஞ்சப்பை திட்ட தொடக்க விழா
x

ஆண்டிப்பட்டியில் மஞ்சப்பை திட்ட தொடக்க விழா நடந்தது

தேனி

ஆண்டிப்பட்டியில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் தலைமை தாங்கினார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜாராம், பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமிபாண்டியன், ஆண்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. இதையடுத்து நகர்ப்புற தூய்மை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மகாராஜன் எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் பேரூராட்சி அதிகாரிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நகர் தூய்மை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜி.கே பாண்டியன், மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story