ரத்தசோகை விழிப்புணர்வு முகாம்


ரத்தசோகை விழிப்புணர்வு முகாம்
x

வாணியம்பாடியில் ரத்தசோகை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி இசுலாமிய பெண்கள் கல்லூரி வளாகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதத் திருவிழா, ரத்தசோகை ஒழிப்பு மற்றும் தேசிய குடற்புழு நீக்க நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தேசிய ஊட்டச்சத்து குழும இணை இயக்குனர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ரேணு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக, வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் ஸ்டெல்லா, ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி ஆகியோர் கலந்து கொண்டு ஊட்டச்சத்து குறித்தும், ரத்த சோகையினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் குடற்புழு குறித்து எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து மற்றும் ரத்த சோகை குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கண்காட்சி, ரத்த சோகை குறித்து விளக்கும் வகையில் விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது‌. மாணவிகளுக்கு வினாடி- வினா, ரங்கோலி மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சக்தி சுபாஷினி நன்றி கூறினார்.


Next Story