ரத்த சோகை விழிப்புணர்வு முகாம்
மாமண்டூர் கிராமத்தில் ரத்த சோகை விழிப்புணர்வு முகாமை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
தூசி
வெம்பாக்கம் தாலுகா மாமண்டூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை வளர்ச்சிப்பணி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து மாத விழா, ரத்த சோகை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜு தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், அனக்காவூர் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் முன்னாள் தலைவர் என்,சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் ஊட்டச்சத்து துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டார்.
தொடர்ந்து மகளிருக்காக செயல்படுத்தி வரும் அரசு திட்டங்கள் குறித்து பேசினார்.
இதையடுத்து ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் கே.விஸ்வநாதன், ஜே.சி.கே.சீனிவாசன், எம்.தினகரன், ஞானவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் தெய்வமணி, முருகேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.