ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டையில் ரத்கத சோகை குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்.
ராணிப்பேட்டையில் ரத்கத சோகை குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்.
பிரசார வாகனம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு பிரசார வாகன தொடக்க விழா கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, அங்கன்வாடி பணியாளர்களிடம் ரத்தசோகை குறித்து விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
3 மாதங்கள்
இந்த வாகனம் மூலம் 3 மாதங்கள் வரை மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி மற்றும் நகர்ப்புற குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று ஒலிபெருக்கியின் மூலம் ரத்து சோகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த வாகனத்தில் ரத்த சோகையினால் குழந்தைகள், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அதனை போக்கிட எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவு முறைகள் குறித்து புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. ரத்த சோகை பாதிப்பு குறித்தும், அதனை எவ்வாறு நிவர்த்தி செய்து கொள்வது என்பது குறித்தும் இந்த வாகனத்தை பார்த்து பயன் அடையலாம்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கிரிஜா, பாரதி, அம்சபிரியா, விஜயலட்சுமி, நகரமன்றத் துணைத் தலைவர் ரமேஷ் கருணா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.