அங்காளம்மன் கோவில் திருவிழா


அங்காளம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:31 PM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே அங்காளம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள மரக்கடை, தேர் வடக்கு தெருவில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில் நேர்த்திக்கடனாக பக்தர்கள் பால் காவடி எடுத்து சென்று சன்னதியில் செலுத்தினர். மேலும் அம்மனுக்கு பால் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அக்னி கப்பரை, அம்மன் வீதிவுலா காட்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story