மதுபாராக மாறிய அங்கன்வாடிமையம்.


மதுபாராக மாறிய அங்கன்வாடிமையம்.
x

திருப்பூர் அருகே மதுபாராக மாறிய அங்கன்வாடிமையம். 3 பக்கங்களில் சுற்றுச்சுவர்கள் இல்லாததால் மதுப்பிரியர்கள் அட்டகாசம் செய்துவருகிறார்கள்.

திருப்பூர்

திருப்பூர் அருகே மதுபாராக மாறிய அங்கன்வாடிமையம். 3 பக்கங்களில் சுற்றுச்சுவர்கள் இல்லாததால் மதுப்பிரியர்கள் அட்டகாசம் செய்துவருகிறார்கள்.

அங்கன்வாடி மையம்

திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அவரப்பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையம் மதுப்பிரியர்களின் பாராக மாறியுள்ளது. இந்த மையத்தில் 20 குழந்தைகள் உள்ளனர்.

இந்த மையத்தின் ஒரு பக்க சுற்றுச்சுவர் 2022-2023-ம் ஆண்டு பல்லடம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்தில் அங்கன்வாடி மையத்தின் ஒரு பக்கத்தில் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. மீதி 3 பக்கமும் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை.

சுற்றுச்சுவர் இல்லை

இதனால் இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் அங்கன்வாடி மையத்தை பாராக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மதுபாட்டில்களை உடைத்தும் பிளாஸ்டிக் டம்ளர்களை வீசியும் செல்கிறார்கள். இதனால் அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கட்டாமல் உள்ள 3 பக்கங்களின் சுற்றுச்சுவரை உடனடியாக கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், குழந்தைகளின் பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.


Related Tags :
Next Story