ரூ.12 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம்
ரூ.12 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம்
நாகப்பட்டினம்
வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் தெற்குகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 12 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒப்பந்தக்காரர் அருண் வரவேற்றார். நிகழ்ச்சியில் வக்கீல் கிரிதரன், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பையன், திலீபன், ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம், ஒன்றியக்குழு உறுப்பினர் மாலதி துரைராசு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சியாமளா தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story