அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடைகள் திறப்பு
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடைகள் திறப்பு விழா நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அச்சமங்கலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், பெருமாபட்டு ஊராட்சி ஜலகாம்பாறையில் பகுதி நேர ரேஷன் கடை மற்றும் குரிசிலாப்பட்டு, ஆண்டியப்பனூர் ஆகிய பகுதிகளில் புதிய ரேஷன் கடைகள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு துணைப்பதிவாளர் பி.பாலசுப்பிரமணியன், தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் ஜி.ஆர்.திருமலை முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜி.வெங்கடேசன், ஏ.கணேசன் ஆகியோர் வரவேற்றனர்.
அங்கன்வாடி கட்டிடம் மற்றும் புதிய ரேஷன் கடைகளை எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, ஏ.நல்லதம்பி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கே.ஆர்.திருப்பதி, ஒன்றியக்குழு தலைவர் விஜியா அருணாசலம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் டி.ஆர்.ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றிய துணை செயலாளர் பரமசிவம், பிரபாகரன், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் சின்னராஜி, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சீனிவாசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் செல்வி, அங்கன்வாடி பணியாளர் கவிதா, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சங்க செயலாளர் கே.அன்பழகன், எஸ்.மாதேஸ்வரன் ஆகியோர் நன்றி கூறினர்.