மேல்சிறுவள்ளூர் ஊராட்சியில் ரூ.12 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி தொடக்கம்
மேல்சிறுவள்ளூர் ஊராட்சியில் ரூ.12 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மேல்சிறுவள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட கோணத்தன்கொட்டாய் பகுதியில் அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கட்டிடம் சேதமடைந்து போனது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனிடம் கோரிக்கை வைத்தனர். அதன்அடிப்படையில் ரூ.12 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை கோணத்தான்கொட்டாய் பகுதியில் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், வக்கீலுமான அசோக்குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர் செல்வி பாலகிருஷ்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.