கடையம் அருகே இடிந்து விழுந்த அங்கன்வாடி மைய மேற்கூரை


கடையம் அருகே இடிந்து விழுந்த அங்கன்வாடி மைய மேற்கூரை
x

கடையம் அருகே அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

தென்காசி

கடையம்:

தெற்குக்கடையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் தெருவில் அங்கன்வாடி மையம் உள்ளது. அங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அந்த அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால், வலுவிழுந்து ஆங்காங்கே விரிசல் விழுந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை அங்கன்வாடி மைய மேற்கூரையின் சிலாப் திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், தெற்கு கடையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி ராமதுரை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். அங்கிருந்த குழந்தைகளை மாற்று இடத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார். மேலும் அந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஆய்வு செய்து இடிக்கப்படும் என்றும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.57 லட்சத்தில் விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story