அங்கன்வாடி மையத்தில் ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு


அங்கன்வாடி மையத்தில் ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாலையூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

பாலையூர் ஊராட்சியில் பாலையூரில் வினையப்பர் குளம் தடுப்பு சுவர், படித்துறை, சாலை அமைப்பது குறித்து குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பாலையூர் தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்தார்.அப்போது தலைமை ஆசிரியர் பேபி பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே உள்ள மின் கம்பி இணைப்பை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் அங்கன்வாடி மையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின் போது தி.மு.க. குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜா, பாலையூர் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story