அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் தட்டு ஏந்தி போராட்டம்
உசிலம்பட்டியில் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் தட்டு ஏந்தி போராட்டம் நடத்தினர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் 3 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கையில் தட்டேந்திபிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் அமிர்தம் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயராஜ் விளக்க உரையாற்றினார் ஆடிட்டர் ஓய்வு பெற்ற சங்க நிர்வாகி பாண்டி வாழ்த்துரை வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 7,850 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும், அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது. அதேபோல் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும்,பேரையூரிலும் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.