அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், உத்தமபாளையம் சார்நிலை கருவூல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், உத்தமபாளையம் சார்நிலை கருவூல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர்கள் காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வூதியர் சங்க ஒன்றிய தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, அகவிலைப்படி ரூ.7,850 வழங்க வேண்டும். சமூக பாதுகாப்பு திட்ட சிறப்பு பென்சன் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story