அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தொடங்கிய போராட்டத்தில் 500 பேர் கலந்து கொண்டனர். மாநில பொதுச் செயலாளர் டெய்சி சிறப்புரையாற்றினார். பள்ளி, கல்லூரிகளுக்கு கோடைகால விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் கோடைகால விடுமுறை வேண்டும் என்பதே அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கையாகும். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை முடியும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என அங்கன்வாடி பணியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story