அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்


அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு கோரிக்கையை ஏற்றதால் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்

நாகப்பட்டினம்


குழந்தைகளின் நலனை கருதி, வெயிலின் தாக்கம் மற்றும் தற்போது பரவி வரும் காய்ச்சலையும் கருத்தில் கொண்டு அங்கன்வாடிகளுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு மின்கட்டணம் அரசே செலுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணிமுடித்த தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். பணியிட மாறுதல் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலை தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில் திடீரென மதியம் காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அறிவித்தனர். அப்போது தமிழக அரசு அங்கன்வாடி பணியாளர்கள் கோரிக்கையின் சிலவற்றை ஏற்று கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.


Related Tags :
Next Story