அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா


அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா
x

அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருச்சி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் மாநிலம் தழுவிய அளவில் 3 கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்ட போராட்டம் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் 2-ம் கட்ட போராட்டம் நேற்று நடந்தது. இதில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மல்லிகாபேகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சித்ரா, பொருளாளர் ராணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் வாழ்த்தி பேசினார். பள்ளி, கல்லூரிகளுக்கு மே மாதம் கோடை விடுமுறை அளிக்கப்படுவதை போல் அங்கன்வாடி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டருக்கான தொகை பில்லில் உள்ளதுபோல் முழுமையாக வழங்கப்பட வேண்டும். 1993-ல் பணிக்கு வந்த பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி நன்றி கூறினார்.


Next Story