அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டையில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 5 ஆண்டுகள் உதவியாளர்களாக பணியாற்றியவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மைய இணைப்பை தவிர்க்க வேண்டும். தனியாருக்கு தாரை வார்க்க கூடாது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் தங்கமயில் தலைமை தாங்கினார். செயலாளர் பொன் லட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் எஸ்தர் ராணி கலந்து கொண்டு பேசினார். முடிவில் பொருளாளர் செல்லம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story