அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கள்ளக்குறிச்சியில் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கொளஞ்சியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் இந்திராகாந்தி, சீலாராணி, செயற்குழு உறுப்பினர்கள் கலா, கவுசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். காலி பணியிடங்களை நிரப்புவதற்கு முன்பு உள்ளூர் இடம் மாறுதல் மற்றும் மாவட்ட இடம் மாறுதல் உடனடியாக நடத்த வேண்டும் புதிய செல்போன் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மகாலிங்கம், ரவி உள்பட 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள, உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.



Next Story