அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் எஸ்தர் ராணி தலைமையிலும், செயலாளர் சாரதா பாய், பொருளாளர் கச்சதேவி முன்னிலையிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு புதிதாக செல்போன் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை பிற பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். நகர்ப்புறங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.3 ஆயிரம் வாடகை வழங்க வேண்டும். 15 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள மையங்களை இணைப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு பின் கோரிக்கை மனு கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story