அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள்  ஆர்ப்பாட்டம்
x

நீடாமங்கலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வட்டாரம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் ராதா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையமாக்குவதையும், குறு மையத்தை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குழந்தைகளின் நலன் கருதியும், வெயிலின் தாக்கத்தையும், தற்போது பரவி வரும் காய்ச்சலையும் கருத்தில் கொண்டு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதேபோல முத்துப்பேட்டை வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் மாதவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் வனசுந்தரி நன்றி கூறினார்.


Next Story