அங்கன்வாடி பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம


அங்கன்வாடி பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம்:

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குத்தாலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் லட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் லதா, மாவட்டத் துணைத் தலைவர் நீலா, ஒன்றிய பொருளாளர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட தலைவர் ரவீந்திரன், துணை செயலாளர் ராமானுஜம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பள்ளி கல்லூரி, விடுமுறை நாட்களை போல அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும், 20 வருடம் பணி முடித்த அங்கன்வாடி பணியாளர்களையும் மற்றும் ஊழியர்களையும் வேறு துறையில் பணி நிரந்தரம் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஒன்றிய செயலாளர் சுமதி, ஒன்றிய துணைத் தலைவர் மேகலா, மாவட்ட துணை செயலாளர் அமுதா, உள்ளிட்ட அங்கன்வாடி பணியாளர்கள், ஊழியர்கள் சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உட்பட 100 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story