முதல்-அமைச்சருக்கு அங்கன்வாடி பணியாளர்கள் நன்றி
கோடை விடுமுறை அளித்த முதல்-அமைச்சருக்கு அங்கன்வாடி பணியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஜோலார்பேட்டையில் உள்ள சந்தைக்கோடியூர் பகுதியில் அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க மாவட்ட தலைவர் கோ.சித்ரா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் க.செல்வநாயகி வரவேற்றார்.
மாநில தலைவர் ரா.சாந்தா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது வருடம் முழுவதும் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மே மாத கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் அவர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அளித்து தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை வரவேற்று அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
மாவட்ட பொருளாளர் விஜயலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாலதி, இணை செயலாளர் சரோஜா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கற்பகம், பிரபாவதி, சுமதி, தமயேந்தி, சாளியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.