அங்கன்வாடி ஊழியர்கள் கொட்டும் மழையில் காத்திருப்பு போராட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் கொட்டும் மழையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் எதிரில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் குழந்தைகள் நலப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். சங்க மாவட்ட செயலாளர் கே.ஜூலி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் எஸ்.உமா, கே.வி.குப்பம் வட்டார தலைவி என்.விஜயநிர்மலா உள்பட 115 பேர் கலந்து கொண்டு கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் வேலை செய்து வரும் எங்களுக்கு பதவி உயர்வு வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சமையல் சிலிண்டர் ரூ.1,200 விலை கொடுத்து வாங்குகிறோம். அதற்காக அரசு ரூ.400 மட்டுமே வழங்குகிறது. இதற்கான முழு தொகையையும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.