சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா


சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா
x
தினத்தந்தி 26 Jun 2023 12:30 AM IST (Updated: 26 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவில் ஆனி உத்திர பெருந்திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் வீதி உலா மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் நாள் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமி- அம்பாள் பூஞ்சப்பரத்தில் வீதி உலா வருதல், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தீர்த்தவாரி, அபிஷேக தீபாரானை, அன்னதானம், மாலையில் சுவாமி-அம்பாள் சப்தாவர்ணகாட்சி, தெரு வீதிகளில் ரிஷப வாகனத்தில் உலா வந்து கோவிலை வந்து அடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழா ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா பிள்ளை, கோவில் பக்த ஜன சபை செயலாளர் அரிகிருஷ்ணன் மற்றும் நன்கொடையாளர்கள், மண்டகபடிதாரர்கள் செய்திருந்தனர்.


Next Story