திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை ஆனி வருசாபிஷேகம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை ஆனி வருசாபிஷேகம்
x
தினத்தந்தி 6 July 2022 5:49 PM IST (Updated: 6 July 2022 5:54 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை ஆனி வருசாபிஷேகம் நடக்கிறது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆனி வருசாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படும். 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் கோவில் மகாமண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டு காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு வருசாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசத்திற்கு வருஷாபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story