சித்தோடு அருகே மர்ம விலங்கு கடித்து 23 நாட்டுக்கோழிகள் சாவு


சித்தோடு அருகே மர்ம விலங்கு கடித்து 23 நாட்டுக்கோழிகள் சாவு
x

சித்தோடு அருகே மர்ம விலங்கு கடித்து 23 நாட்டுக்கோழிகள் இறந்தன.

ஈரோடு

பவானி

சித்தோடு அருகே மர்ம விலங்கு கடித்து 23 நாட்டுக்கோழிகள் இறந்தன.

23 நாட்டுக்கோழிகள்

சித்தோடு அடுத்த உள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 67). விவசாயி. இவருக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் ஒரு ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பின் மத்தியில் பண்ணை அமைத்து நாட்டுக்கோழிகளை வளர்த்து விற்பனை செய்து வந்து உள்ளார்.

நேற்று முன்தினம் மாலையில் கோழிகளுக்கு உணவு கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். மீண்டும் நேற்று அதிகாலை வந்து கோழிகளுக்கு தீவனம் வைத்து உள்ளார். இதையடுத்து காலை 9 மணிக்கு வந்து பார்த்தபோது 23 நாட்டுக்கோழிகள் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மர்ம விலங்கு

பண்ணையை சுற்றி அமைக்கப்பட்ட கம்பி வலையின் ஒரு இடத்தில் வளைத்து வந்த மர்ம விலங்கு ஒன்று நாட்டுக்கோழிகளை கடித்து கொன்றுவிட்டு சென்றது தெரியவந்தது.

இதுபற்றி அறிந்ததும், ஈரோடு கால்நடைத்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த நாட்டுக்கோழிகளை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவான மர்ம விலங்கின் கால் தடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இறந்த நாட்டுக்கோழிகள் அந்த பகுதியில் புதைக்கப்பட்டது.

அச்சம்

கடந்த சில நாட்களாக சித்தோடு, கரட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் மர்ம விலங்குகள் புகுந்து ஆடுகளையும், கோழிகளையும் இரவு நேரத்தில் கொன்று வந்து உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து கால்நடை வளர்ப்போ்ா கூறுகையில், 'கால்நடைகளை கொன்று வரும் மர்ம விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து, அவைகள் கிராமத்துக்குள் புகாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


Next Story