கால்நடை பராமரிப்பு சிகிச்சை முகாம்
தலைவன்வடலியில் கால்நடை பராமரிப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
ஆறுமுகநேரி:
கால்நடை பராமரிப்பு துறை தூத்துக்குடி உதவி இயக்குனர் சந்தோஷ முத்துக்குமார், திருச்செந்தூர் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் செல்வகுமார் ஆகியோர் அறிவுரையின்படி ஆத்தூர் நகர பஞ்சாயத்து பகுதியான தலைவன்வடலியில் கால்நடைகள் சிகிச்சை மற்றும் பராமரிப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் கால்நடைகளுகாகு மலடு நீக்கம் செய்வது, குடற்புழு அகற்றுதல், நோயற்ற கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தல், சினை பரிசோதனை, செயற்கை முறை இனவிருத்தி, மடி வீக்கம் நோய் சினையுறா பசுக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்த முகாமினை ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.கமால்தீன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில் கண்ணன், சங்கரராஜேஸ்வரி, பிரதீப், சரண்யா, உதவியாளர் மாரியப்பன் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் அளித்தனர். நிகழ்ச்சியில் ஆத்தூர் நகர பஞ்சாயத்து உறுப்பினர்கள் முத்து, அசோக்குமார், சங்கரேஸ்வரி, அருணா குமாரி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.