கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்


கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ் அறிவுரையின் பேரிலும், உதவி இயக்குனர் விஜயகுமார் உத்தரவின் படியும் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி தலைமை தாங்கினார். கால்நடை உதவி டாக்டர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் கால்நடைக்கு தடுப்பூசி மற்றும் சிகிச்சை, பசு மற்றும் எருமை மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில் சிறந்த கால்நடை உரிமையளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில் கால்நடை ஆய்வாளர் தனசேகரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சிவராஜவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story