கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்


கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
x

பண்டாரவாடை ஊராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

பண்டாரவாடை ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்திகனி சாதிக் தலைமை தாங்கினார். கால்நடை உதவி டாக்டர்கள் முத்துக்குமார், சிவபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கால்நடை நோய்களுக்கான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ேபாடுதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. இந்த முகாமில் 350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன் பெற்றன. இதில் சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் சிவராஜவள்ளி, செயற்கை முறை கருவூட்டாளர்கள் ஸ்ரீகுமார், தம்பிராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story