கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
அரியலூர்
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே காங்குழி அய்யூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை உடையார்பாளையம் கோட்ட உதவி இயக்குனர் ரிச்சார்டுராஜ் ெதாடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி, சினை ஊசி, சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, கால்நடைகளுக்கு பரிசோதனை செய்தனர். முடிவில் சிறந்த கிடாரி வளர்த்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story