கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்


கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 10:09 AM GMT)

பனிச்சமேடு, காந்தலவாடி ஊராட்சிகளில் இன்று கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனிச்சமேடு ஊராட்சி, திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காந்தலவாடி ஊராட்சி ஆகிய இடங்களில் இன்று(புதன்கிழமையும்), மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாகல்பாக்கம் ஊராட்சி, விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செ.குன்னத்தூர் ஊராட்சி, காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கஞ்சனூர் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நாளை(வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

இதில் கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல், குடற்புழு நீக்கப்பணி, ஆண்மை நீக்கம், தாது உப்புக்கலவை வழங்குதல், மலடுநீக்க சிகிச்சை, கால்நடை பராமரிப்பு, நோய்கள் மற்றும் திட்டப்பணிகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சிகள் உள்ளிட்டவை அளிக்கப்பட உள்ளது. மேலும் கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், நிபுணர்கள் கலந்துகொண்டு கால்நடைகளை வளர்ப்பது, பராமரிப்பது குறித்து ஆலோசனை வழங்கவுள்ளனர். எனவே பொதுமக்கள், இம்முகாமை பயன்படுத்தி தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story